|
நீங்கள் செய்திடப்போகும் காரியம் தேவ சித்தம்தானா? இல்லையா? என நீங்கள் திகைக்கும்போது கீழ்காணும் பத்துக் கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுப்பாருங்கள். இக்கேள்விகள் அனைத்திற்கும் நேர்மையாக நீங்கள் கூறிடும் பதில், தேவ சித்தம் என்ன? என்பதை மென்மேலும் தெளிவாக நீங்கள் அறிந்துகொள்ள உதவிடும் என்பது திண்ணம்!
(1) நான் செய்வது, எனக்குத் தெரிந்தவரை - இயேசுவின் உபதேசங்களில் அல்லது அப்போஸ்தலர்களின் உபதேசங்களில் ஏதேனும் ஒன்றை மீறியோ அல்லது புதிய ஏற்பாட்டின் ஆவிக்கு முரணாகவோ இருக்கிறதா? (2தீமோத்தேயு 3:16,17).
(2) இதை நான், ஓர் சுத்தமனசாட்சியுடன் செய்திட முடியுமா? (1யோவான் 3:21).
(3) இதை நான், தேவனுடைய மகிமைக்கென்று செய்திட முடியுமா? (1கொரிந்தியர் 10:31).
(4) இதை நான், இயேசுவை என் கூட்டாளியாகச் சேர்த்து செய்திட முடியுமா? (கொலோ 3:17).
(5) நான் செய்யப்போவதை தேவன் ஆசீர்வதிக்கும்படி என்னால் ஜெபித்திட முடியுமா? (2கொரிந்தியர் 9:8).
(6) நான் செய்வது, என் ஆவிக்குரிய உத்தமத்தின் கூர்மையை ஏதேனும் ஒருவகையில் மழுங்கிடச் செய்யுமா? (2தீமோத்தேயு 2:15).
(7) நான் செய்வது, எனக்குத்தெரிந்தவரை - ஆவிக்குரிய வளர்ச்சியையும், பக்திவிருத்தியையும் என்னில் உண்டாக்கிட முடியுமா? (1கொரிந்தியர் 6:12, 1கொரிந்தியர் 10:23).
(8) நான் செய்வது, இயேசு இப்பூமிக்கு திரும்ப வரும் அதே பொழுதில் காணப்பட்டால், அதனிமித்தம் நான் மகிழ்ச்சியடைய முடியுமா? (1யோவான் 2:28).
(9) நான் செய்வது, யாராகிலும் ஒருவரை இடறிடச் செய்யுமா? (ரோமர் 14:13, 1கொரி 8:9).
(10) இதைச்செய்திட, என் ஆவியில் ஓர் விடுதலையை என்னால் உணரமுடிகின்றதா? (1யோவான் 2:27).
|