English shape=
      

வாரத்தில் ஓர் முத்து! - WEEKLY PRECIOUS PEARL!

வாரத்தில் ஓர் முத்து! என்ற இந்த இணையதள சுருக்கமான செய்தி, உங்கள் உள்ளத்தில் பெற்றுக்கொள்ளும் "பரலோக பொக்கிஷம்" ஆகும்! இதை நீங்கள் ஆர்வத்துடன் வாசித்து, உங்கள் இணைய தள நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். காலாவட்டத்தில் நீங்கள் மாத்திரமல்ல.... உங்கள் மூலம் இந்த இணையதள செய்தியில் பங்கு பெறும் யாவரும், நம் ஆண்டவர் இயேசு கூறியதைப்போலவே பரலோகத்தில் உங்கள் பொக்கிஷங்கள் வாரந்தோறும் கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்து குவிக்கப்படுவதை ( மத்தேயு 6:20 ) மனதார அறிந்து மகிழ்வீர்கள்! அது, நித்திய மகிழ்ச்சியாய் உங்களில் புரண்டோடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை!! திறந்த மனதுடன் வாசியுங்கள்... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்!!
2009 |  2010 |  2011 |  2012 |  2013
‘மென்மையான சுபாவம்’ கிறிஸ்துவின் சபைக்கு தேவை! வாழ்வேயாகும்!
ஆகஸ்ட் 2012 (1) - சகரியா பூணன்

ப்போதுமே, ஒருவர் செய்யும் எவ்வளவு நல்ல செயலாக இருந்தாலும் அதிலும்கூட ஏதாகிலும் குறைவுகள் காணப்படத்தான் செய்யும்! ஏனென்றால், நாம் எல்லோருமே நன்மையேதுமில்லாத ஓர் மாம்சத்தையே பெற்றிருக்கிறோம். ஆனால் குற்றம்சாட்டும் ஆவியையுடையவர்கள் பிறருடைய குறைகளை மட்டுமேயல்லாமல், ஒருநாளும் தங்களிடமுள்ள குறைகளைக் காணவே மாட்டார்கள்!

ஆண்டவருடைய வருகையில், அந்தப் பூரண வெளிச்சத்தில் மாத்திரமே, நம்முடைய சுயநலத்தையும், பெருமையையும் நாம் “முழு அளவில்” காண்போம் (1கொரிந்தியர் 13:12). ஆகிலும், நாம் இப்பொழுதே தேவனுடைய வெளிச்சத்தில் “நம் குறைகளைக்” கண்டு விட்டால்...... நாம் ஒருவரையும் மீண்டுமாய் குறைகூறி குற்றம் சாட்டவே மாட்டோம்!! இவ்வாறு ‘எவ்வளவு அதிகமாய்’ நம்முடைய அசுசிகளை நாம் காண்கிறோமோ, ‘அவ்வளவு குறைவாய்’ பிறருடைய குறைகளை நாம் காண்பது.... குறைந்து கொண்டே போய்விடும்!

இந்த உண்மையைத் தெளிவாய் காணும்படியான உதாரணங்களை சற்று கவனியுங்கள். பிறரிடம் உள்ள விபச்சாரத்தைக் குற்றப்படுத்திப் பேசிய நீங்கள், அன்று காலை அதே போன்ற விபச்சாரத்தை நீங்களே செய்திருந்தால் அது எவ்வளவு பெரிய மாய்மாலமாய் இருக்கும்! அதேபோல, தன் பிள்ளை பாலைக் கொட்டி விட்டதைக் கடுமையாய் குற்றப்படுத்திய ஒரு தகப்பன், இரண்டு நிமிடங்களுக்கு முன்பாக அவரே காபியை தரையில் கொட்டியிருந்தால், அந்த தகப்பன் எவ்வளவு பெரிய “கல் நெஞ்சனாய்” இருக்கக்கூடும்!!

காரியம் இவ்வாறிருக்க, நாம் ஏன் பிறரை நியாயம்தீர்த்து குற்றம் சாட்டுகிறோம்? ஏனென்றால், இதுபோன்ற தவறுகளை நாம் ஒருபோதும் செய்ததில்லை என்று நாமாக எண்ணிக்கொள்ளும் வஞ்சகமேயாகும்! எனவேதான் விபச்சாரத்தில் பிடிபட்ட ஸ்திரீயை பரிசேயர்கள் “மிக தைரியமாய்” இயேசுவுக்கு முன்பாக கொண்டுவந்து நிறுத்தினார்கள். ஆனால் அவர்கள் இயேசுவின் பிரசன்னத்திற்கு வந்தவுடனேயே, அவரிலிருந்து பிரகாசித்த வெளிச்சம், அவர்களிடமிருந்த “அதே பாவத்தை” வெளியரங்கப்படுத்திக் காண்பித்து விட்டது. எனவேதான், அவர்கள் “மிகுந்த வெட்கத்துடன் அவரைவிட்டுப் பின்வாங்கிச்” சென்று விட்டார்கள்! இதைப்போலவே, கடைசிநாளின் நியாயத்தீர்ப்பில் நிற்கப் போகும் அனைவருக்கும் சம்பவிக்கும்!

எனவே, வேறொரு நபர் எவ்வளவு சுயநலமாய் அல்லது பெருமையாய் அல்லது முரட்டாட்டமாய் நடந்து கொள்கிறார் என நாம் காண்பது நம் யாவருக்கும் மிக எளிது...... அதே சமயம், நமக்குள்ளும் இதே பாவங்கள் எவ்வளவு ஆழமாய் குடிகொண்டிருக்கிறது என்பதை அறியாமலே நாம் இருக்க முடியும்! இயேசுவின் மகிமையை நமக்கு தேவன் மீண்டும் பசுமையாய் வெளிப்படுத்திக் காண்பிக்கும்படி அவரிடம் கேட்கக்கடவோம். அந்தப் பிரகாசமான வெளிச்சத்தைக் கண்டவர்கள் மாத்திரமே, தங்கள் மாம்சத்திற்குள் ஆழமாய் காணும் சுயநலத்தையும், சுய சித்தத்தையும், தற்பெருமையையும் கண்டிட முடியும். அவ்வாறு நாம் கண்டுவிட்டால், நாம் அனைவருமே அவருக்கு முன்பாக முகம் குப்புற விழுந்து மனந்திரும்பவும், தேவ பக்திக்குரிய துயரமடையவும் முடியும்! இவ்விதம் உங்கள் வாழ்வில் நடந்துவிட்டால், பிறரைக் குற்றப்படுத்தி நியாயந்தீர்ப்பதற்கு நீங்கள் முழுவதுமாய் முற்றுப்புள்ளி வைத்துவிட மாத்திரமல்லாமல், யாவரிடமும் “கிறிஸ்துவின் மென்மையான சுபாவத்தைக்” காட்டுகிறவர்களாய் நாம் மாறிட முடியும்! இதுவே, இன்று சபையில் தேவைப்படும் மிகமுக்கியமான திவ்விய சுபாவமாய் இருக்கிறது!!

தமிழ் வடிவம் : டி. ரத்தினகுமார்     அச்சு வடிவம்    மின்அஞ்சல் அனுப்புக

"வாரத்தில் ஓர் முத்து!" - உங்கள் பிரதிபலிப்புகள், கேள்விகள் எதுவாயினும் அவைகளை எங்களுக்கு எழுதுங்கள்! எங்களின் மின் அஞ்சல் :tamil@cfcindia.com, cfc@cfcindia.com
பக்கத்தை மின்அஞ்சல் செய்க | வாரத்தில் ஓர் முத்து | தேவ செய்திகள் | ஆடியோ| வீடியோ | தொடர்பு கொள்ள

© Copyright - Christian Fellowship Church , Bangalore. (INDIA)