English shape=
      

வாரத்தில் ஓர் முத்து! - WEEKLY PRECIOUS PEARL!

வாரத்தில் ஓர் முத்து! என்ற இந்த இணையதள சுருக்கமான செய்தி, உங்கள் உள்ளத்தில் பெற்றுக்கொள்ளும் "பரலோக பொக்கிஷம்" ஆகும்! இதை நீங்கள் ஆர்வத்துடன் வாசித்து, உங்கள் இணைய தள நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். காலாவட்டத்தில் நீங்கள் மாத்திரமல்ல.... உங்கள் மூலம் இந்த இணையதள செய்தியில் பங்கு பெறும் யாவரும், நம் ஆண்டவர் இயேசு கூறியதைப்போலவே பரலோகத்தில் உங்கள் பொக்கிஷங்கள் வாரந்தோறும் கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்து குவிக்கப்படுவதை ( மத்தேயு 6:20 ) மனதார அறிந்து மகிழ்வீர்கள்! அது, நித்திய மகிழ்ச்சியாய் உங்களில் புரண்டோடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை!! திறந்த மனதுடன் வாசியுங்கள்... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்!!
2009 |  2010 |  2011 |  2012 |  2013
சத்தியத்தில் உறுதி கொண்டவர்கள் பிரவேசிக்கும் இடுக்கமான வாசல்!
ஜுலை 2012 (2) - சகரியா பூணன்

யேசு தன்னைத்தானே பிரியப்படுத்தவில்லை! என்றே வாசிக்கிறோம். இவ்வாறு இயேசுவைப்போல் தங்கள் ஜீவியத்தில் நடக்க விரும்புவோர் மிகவும் கொஞ்சம் பேர்களே இன்று இருக்கிறார்கள். மற்றவர்கள், தங்கள் ஜீவனை வெறுப்பதற்குப் பதிலாக அதை சிநேகிப்பவர்கள். இவர்கள் இயேசுவின் சீஷர்களாய் இருக்கவே முடியாது (லூக்கா 14:26). இவ்வுலகத்தின் சுபாவமான ஜீவியத்தை வெறுப்பவர்களே நித்திய ஜீவனை சுதந்தரிப்பார்கள் என்று இயேசு கூறினார் (யோவான் 12:25). இதைப் புரிந்துகொண்டு ஜீவிப்பவர்கள்தான் எத்தனை கொஞ்சம்! இந்தச் சிலர்தான் இடுக்கமான வாசலில் உட்பிரவேசிப்பார்கள்!!

பிறருடைய அபிப்ராயத்திற்கு அதிக கவனம் செலுத்தி, மனுஷீகப் புகழ்ச்சியை விரும்பும் அநேகர் இடுக்கமான வாசலின் வெளியிலேயே நின்றுவிடுகிறார்கள்! மனுஷர்களுக்குப் பயந்ததால் உருவான கண்ணியில் இவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். உள்ளே பிரவேசிக்க இவர்கள் விரும்பும் வெறும் விருப்பத்தால் என்ன பிரயோஜனம்? நாம் தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்க வேண்டுமென்றால், பலவந்தம் செய்ய வேண்டும் என்றல்லவா இயேசு முழங்கினார் (லூக்கா 16:16). ஏனெனில், இயேசுவின் நாட்களில் இருந்த பரிசேயர்கள் போலவே இன்றைய ஸ்தாபன மதத்தலைவர்களும், முன்னோர்களின் பாரம்பரியத்திற்கு நம்மை அடிமைகளாக்கி, தாங்களும் பிரவேசியாமல் பிரவேசிக்கப் போகிறவர்களையும் பிரவேசிக்க விடாமல் தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு வெளியிலேயே நம்மை நிறுத்திவிட முயற்சிப்பார்கள்.... எனவேதான், பலவந்தம் இல்லையேல் பிரவேசமும் இல்லை!

எல்லாப் பாவங்களுக்கும், எவ்வித வேதவசன முரண்பாட்டிற்கும் ஆணித்தரமாக எதிர்த்து நிற்பவர்களும், தேவனுக்குரிய மேன்மைகளைப் பெற்றிட ‘என்ன விலைக்கிரயமானாலும்’ செலுத்தத் துணிந்தவர்களுமே.... இவர்கள் மாத்திரமே.... இந்த இடுக்கமான வாசலுக்குள் உட்பிர வேசித்திட முடியும்.

இவர்களே, இன்றைய கிறிஸ்தவத் தலைவர்களாகக் கருதப்படுபவர்களிடமிருந்து உருவாகும் எதிர்ப்புகள், பொய்யான குற்றச்சாட்டுகள், தவறாய் புரிந்துகொள்ளப்படுதல், பயமுறுத்தப்படுதல் போன்ற தடைகளையெல்லாம் மீறி இக்குறுகிய வாசலுக்குள் உட்பிரவேசிப்பார்கள்!

இவ்வாறு வேதவசனத்தைக் கறைப்படுத்துபவர்களோடு நாம் சற்றும் ஐக்கியம் கொள்ளவே கூடாது. நாம் இடுக்கமான வாசலுக்குள் பிரவேசிக்க வேண்டுமென்றால், நாம் “அறிந்த எல்லாப் பாவங்களுக்கும்” (Conscious sins) முடிவான முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும். விபச்சாரம், பொய்களோடு எப்படி நாம் பிரவேசிக்க முடியாதோ, “அதைப் போலவே” பொறாமை, மன்னிக்காத சுபாவம், சுய மேட்டிமையான சிந்தைகளோடும் இக்குறுகிய வாசலுக்குள் பிரவேசிக்க முடியாது! இவ்விதமாக தேவனுடைய வசனத்தைக் கலப்படமின்றி பேச எத்தனை பேர் இன்று துணிவு கொண்டுள்ளார்கள்?

தமிழ் வடிவம் : டி. ரத்தினகுமார்     அச்சு வடிவம்    மின்அஞ்சல் அனுப்புக

"வாரத்தில் ஓர் முத்து!" - உங்கள் பிரதிபலிப்புகள், கேள்விகள் எதுவாயினும் அவைகளை எங்களுக்கு எழுதுங்கள்! எங்களின் மின் அஞ்சல் :tamil@cfcindia.com, cfc@cfcindia.com
பக்கத்தை மின்அஞ்சல் செய்க | வாரத்தில் ஓர் முத்து | தேவ செய்திகள் | ஆடியோ| வீடியோ | தொடர்பு கொள்ள

© Copyright - Christian Fellowship Church , Bangalore. (INDIA)