English shape=
      

வாரத்தில் ஓர் முத்து! - WEEKLY PRECIOUS PEARL!

வாரத்தில் ஓர் முத்து! என்ற இந்த இணையதள சுருக்கமான செய்தி, உங்கள் உள்ளத்தில் பெற்றுக்கொள்ளும் "பரலோக பொக்கிஷம்" ஆகும்! இதை நீங்கள் ஆர்வத்துடன் வாசித்து, உங்கள் இணைய தள நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். காலாவட்டத்தில் நீங்கள் மாத்திரமல்ல.... உங்கள் மூலம் இந்த இணையதள செய்தியில் பங்கு பெறும் யாவரும், நம் ஆண்டவர் இயேசு கூறியதைப்போலவே பரலோகத்தில் உங்கள் பொக்கிஷங்கள் வாரந்தோறும் கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்து குவிக்கப்படுவதை ( மத்தேயு 6:20 ) மனதார அறிந்து மகிழ்வீர்கள்! அது, நித்திய மகிழ்ச்சியாய் உங்களில் புரண்டோடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை!! திறந்த மனதுடன் வாசியுங்கள்... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்!!
2009 |  2010 |  2011 |  2012 |  2013
தீமை பேசப்படுகையில் இயேசுவின் அடிச்சுவடு காணக் கடவோம்!
ஜுன் 2012 (1) - சகரியா பூணன்

ரு சூழ்நிலையில் உங்களோடு வேலை செய்பவர்கள் உங்களைத் தவறாய் புரிந்துகொண்டு குற்றம் சாட்டுவதாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்னதான் விளக்கம் கூறினாலும், அவைகளைக் கேட்பதற்கு அவர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். இவ்வாறு நீங்கள் முற்றிலும் குற்றமற்ற சூழ்நிலையில் நீங்கள் செய்ய வேண்டியதென்ன? இந்த நிலைக்காக நீங்களே நொந்து மடிந்து கொள்வதா? தேவையேயில்லை! தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக உங்கள் மனசாட்சி தூய்மையாய் இருக்கிறதா என்பதை மாத்திரம் உறுதி செய்யுங்கள்.... பின்பு, இந்த விஷயத்தை உங்கள் தேவனிடமே விட்டுவிடுங்கள்! நீங்கள் செய்யக்கூடியதெல்லாம், இது ஒன்றுதான்!! இந்த வழிமுறையைத்தான் நான் பல ஆண்டுகளாய் பின்பற்றி வருகிறேன். அதினிமித்தம் நான் மெய்யாகவே ஆசீர்வதிக்கப்பட்டும் இருக்கின்றேன். ஆகவேதான், இதே வழிமுறையை நீங்களும் பின்பற்றும்படி உங்களுக்கும் ஆலோசனையாகக் கூறுகிறேன்.

கர்த்தருக்கு ஊழியத்திற்கு பயனுள்ளவர்களாய் இருக்கும் ஒவ்வொருவரும் சாத்தானின் தாக்குதலுக்கு ‘இலக்காக’ இருக்கிறார்கள். நாம் எந்த அளவிற்கு தேவனுக்குப் பயனுள்ளவர்களாய் இருக்கிறோமோ அந்த அளவுக்கு சத்துருவால் நாம் தாக்கப்படுவோம்! இத்தாக்குதலைத் தவிர்த்திட நம்மால் முடியாது. சாத்தான் நிச்சயமாய், அவதூறுகள்.... பொய்யான குற்றச்சாட்டுகள்.... திரித்துக் கூறப்பட்ட கதைகள்.... போன்றவைகள் மூலமாய் நம்மைத் தாக்கிடவே செய்வான்! அதுமாத்திரமல்ல, அவன் நம்முடைய மனைவியையும், பிள்ளைகளையும்கூட தாக்குவான்!!

இயேசுவின் ஜீவியகாலத்தில் ஜனங்கள் அவரைப்பற்றிக் கூறிய தீமையானவைகளைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். “அதே வார்த்தைகளைத்தான்” அவரை உண்மையாய் பின்பற்றும் சீடர்களைத் தாக்குவதற்கு இன்றும் ஜனங்கள் பயன்படுத்துகிறார்கள். ஜனங்கள் இயேசுவைப் “போஜனப்பிரியன், மதுபானபிரியன்” (லூக்கா.7:34) என்றும், “மதிமயங்கிய பைத்தியக்காரன்” (மாற்கு.3:21) என்றும், “பிசாசு பிடித்தவன்” (யோவான்.8:48) என்றும், “பிசாசுகளின் தலைவன்” (மத்தேயு.12:24) என்றும்... இன்னும் இதுபோன்ற பொல்லாத பெயர்களை வைத்து இயேசுவைத் தாக்கினார்கள். மேலும், வேதமும் மோசேயும் கற்பித்த உபதேசங்களுக்கு விரோதமாய் இயேசு “கள்ள உபதேசம்” பிரசங்கிக்கிறார் என்றும் ஜனங்கள் கூறினார்கள் (யோவான்.9:29). இவ்வாறாகவே, ஆண்டவரிடம் வந்து ஜனங்கள் சத்தியத்தைக் கேட்க விடாதபடி அவரிடமிருந்து அவர்களை விரட்டி விட்டார்கள். ஆனால் இயேசுவோ இதுபோன்ற ஜனங்களின் தாக்குதல் வாசகங்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமென சிறிதேனும் சிந்திக்கக்கூட இல்லை!

ஆம், தனிப்பட்ட விதத்தில் தன்மீது தாக்கிய எந்த குற்றச்சாட்டுகளுக்கும் அவர் ஒருபோதும் பதில் பேசவே இல்லை. அவர்போலவே நாமும் அவ்விதமே இருந்திடக்கடவோம்!

தமிழ் வடிவம் : டி. ரத்தினகுமார்     அச்சு வடிவம்    மின்அஞ்சல் அனுப்புக

"வாரத்தில் ஓர் முத்து!" - உங்கள் பிரதிபலிப்புகள், கேள்விகள் எதுவாயினும் அவைகளை எங்களுக்கு எழுதுங்கள்! எங்களின் மின் அஞ்சல் :tamil@cfcindia.com, cfc@cfcindia.com
பக்கத்தை மின்அஞ்சல் செய்க | வாரத்தில் ஓர் முத்து | தேவ செய்திகள் | ஆடியோ| வீடியோ | தொடர்பு கொள்ள

© Copyright - Christian Fellowship Church , Bangalore. (INDIA)