English shape=
      

எங்களை குறித்து - ABOUT US

நாங்கள் விசுவாசிப்பது:
வேதாகமானது ( 66 புத்தகங்கள் கொண்ட ) தேவனால் ஏவப்பட்டு, எக்காலத்தும் அழியாத் தன்மையுள்ள தேவனுடய வார்த்தை. அது ஒன்றே இந்த புலோகத்தில் உங்கள் ஜீவனுக்கு போதுமான வழிகாட்டியாக உள்ளது..
தேவன் ஒருவரே. அவரே பிதா, குமாரன், பரிசுத்தாவியாக நித்திய காலமாய் இருக்கிறவர்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவத்துவத்திலும், அவர் கன்னியின் வயிற்றில் பிறந்தவர். ஒரு சிறிதும் பாவமில்லாத வாழ்கை வாழ்ந்தவர். நம்முடைய பாவ நிவாரணத்திற்காய் மறித்தவர். உயிர்த்தெழுந்தவர். தந்தையிடம் ஏறிச்சென்றவர். தம்முடைய சீஶர்களை தம்மிடமாய் சேர்த்துக் கொள்ள திரும்ப வருகிறவர்.
எல்லா மனிதர்களும் பாவத்தால் மரித்து துளைந்து போனவர்கள். அவர்களுடைய பாவ மான்னிப்பிற்கு ஒரே வழி மனந்திரும்புதலும், மரித்து உயிர்த்தெழுந்த கிறிஸ்த்து இயேசுவின் மேல் நம்பிக்கை வைப்பதும்.
பரிசுத்த ஆவியானவர் திரும்பவும் வலுவூட்டுகின்ற கிரியை செய்கின்றவர். அதனால் கடவுளின் மகனாவதற்கு ஒருவன் மீண்டும் பிறப்பான்.
கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தினால் மட்டுமே நேர்மை பிறக்கும். அதற்கு சாட்சி கடவுளின் நாமம் மகிமைப்படும் காரியங்கள் மட்டுமே செய்வது.
மறுபடியும் பிறந்தவுடன் பிதா, சுதன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் நீரில் ழூழ்கி ஞானஸ்நானம் பெறுவது.
கிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழ்கையிலும், வார்த்தையிலும் இருப்பதற்கு பலம், பரிசுத்த ஆவியில் எப்பொழுதும் நிரம்பியிருப்பது, தவிர்கமுடியாதது.
நீதிமான்கள் உயிர்த்தெழுந்து நித்ய ஜீவனில் பிரவேசிப்பர். துர்மார்க்கர் நித்ய நரகத்தில் பிரவேசிப்பர்.


சகோ. சகரியா பூணனைப் பற்றி

இந்திய கப்பற்படை அதிகாரியாக பணியாற்றிய சகோ. சகரியா பூணன் அவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக விவிலிய போதகராகவும், நிறைய சபைகளுக்கு மூப்பராகவும் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவுக்கு ஊழியம் செய்து வருகிறார்.
இவர் நிறைய புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் ஆங்கில மொழியில் எழுதியுள்ளார். அவைகள் மற்ற இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இவர் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் கொடுத்த செய்திகள் ஒலி, ஒளி நாடாக்களில் கிடைக்கப்பெறுகின்றன (புத்தகங்கள், ஒலி, ஒளி நாடாக்கள் பகுதியில் நோக்குக).
மற்ற மூப்பர்கள் போல சகோ. சகரியா பூணன் அவர்களும் அவருடைய ஊழியத்திற்கு சம்பளம் பெற்றுக்கொள்வதில்லை. கிறிஸ்தவ ஐக்கிய சபை மூலமாக வெளியிடப்படும் புத்தகங்களுக்கும் உரிமைத்தொகை பெற்றுக் கொள்வதும் இல்லை. ’கூடாரம் செய்தல்’ தொழில் மூலம் தனது குடும்பதிற்கு உதவி செய்து வருகிறார்.

பக்கத்தை மின்அஞ்சல் செய்க | வாரத்தில் ஓர் முத்து | தேவ செய்திகள் | ஆடியோ| வீடியோ | தொடர்பு கொள்ள

© Copyright - Christian Fellowship Church , Bangalore. (INDIA)